அந்தியூர் மதுபான கடையில் திடீரென குவிந்த மதுபிரியர்கள்

அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் திடீரென குவிந்த மது பிரியர்கள்.

Update: 2022-02-17 16:00 GMT

மது வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மதுபிரியர்கள்.

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி இன்று முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தேர்தல் நடைபெறும் பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்க அரசின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் பகுதியை ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் உள்ள மதுபான கடைகளில் மது பிரியர்கள் மதுபானங்கள் வாங்க அதிக அளவில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பிரம்மதேசம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் இன்று மாலை அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. 


இதையடுத்து தகவல் அறிந்து வந்த அந்தியூர் காவல்துறையினர் மதுபான கடையில் கும்பலாக குவிந்த மது பிரியர்களை வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தினர், இதனையடுத்து வரிசையில் நின்று மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர். மேலும் அந்தியூர் பேரூராட்சி பகுதியை ஒட்டியுள்ள இந்த பிரம்மதேசம் பகுதியில் செயல்பட்டுவரும் மதுபான கடையில் இருந்த மொத்த மதுபான பார்களும் இன்று ஒரே நாளில் விற்றுத் தீர்ந்ததாக, டாஸ்மார்க் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் ஒருசில மது பிரியர்கள் மதுபானங்கள் இன்றியும் திரும்பி செல்லும் நிலைமையும் ஏற்பட்டது.

Tags:    

Similar News