கிறிஸ்துமஸ் பண்டிகையாெட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.4.80 கோடிக்கு மது விற்பனை
ஈரோடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையன்று, ரூ.4.80 கோடிக்கு மது விற்பனை. கடந்த ஆண்டை விட விற்பனை சரிந்தது.;
ஈரோடு மாவட்டத்தில் 210 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 93 பார் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தினமும் ரூ. 4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகி வரும். ஆனால் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிக அளவு விற்பனை ஆகி வருகிறது. நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
கிறிஸ்துமஸ் விடுமுறை அன்று மட்டும், ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ.4 கோடியே 79 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆனதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்தார். ஆனால், இது கடந்த ஆண்டை விட குறைவாகும். கடந்த ஆண்டு ரூ.7 கோடிக்கு மேல் விற்பனை நடந்தது. ஆனால் நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ. 5 கோடியே 91 லட்சம் மதுபானம் விற்பனையானதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்தார். இது நேற்று முன்தினத்தை விட ரூ.1 கோடியே 11 லட்சம் அதிகமாகும்.