கோபிச்செட்டிப்பாளையம் அருகே சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
கோபிச்செட்டிப்பாளையம் அருகே சட்டக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் மெகபூப் பாஷா. இவரது மகள் சாஹினாபீவி (வயது 30). இவர் கோவை அரசு சட்ட கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இவருக்கும் முகமது உவைஸ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சாஹினா பீவி மற்றும் அவரது கணவர் முகமது உவைஸ்க்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக சாஹினாபீவி தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இதனையடுத்து, முகமது உவைஸ் விவகாரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்திலும் கணவன்- மனைவிக்கு இடையே விவாகரத்து உறுதியானது. இதனால் மனமுடைந்து சாஹினாபீவி மாடியில் படிப்பதாக கூறி சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோபிச்செட்டிப்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்..