கடம்பூர் மலைப்பகுதியில் வீதி நாடகம் மூலம் சட்ட விழிப்புணர்வு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதி கிராமங்களில் சட்ட விழிப்புணர்வு குறித்த வீதி நாடகங்கள் நடத்தப்பட்டது.;
சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதி கிராமங்களில் சட்ட விழிப்புணர்வு குறித்த வீதி நாடகங்கள் நடத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ரீடு சேவை நிறுவனமானது செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 23 வருடங்களாக குழந்தைகள், பெண்கள், பழங்குடியினர் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வீடு நிறுவனமும், பாரத் சட்ட கல்லூரி இணைந்து கடம்பூர் மலைப்பகுதி பழங்குடியினர் கிராமங்களான மாமரத்தொட்டி, மற்றும் உகினியம் கிராமங்களுக்கு சென்று வீதி நாடகங்கள் மூலம் மக்களுக்கு அடிப்படை உரிமை சட்டம்,மற்றும் பிற சட்டங்களை பற்றியும் எவ்வாறு புகார் அளிப்பது, அரசு நலத்திட்டங்கள் என்னென்ன என்பதை பற்றியும், மற்றும் அரசு பணிக்கு தேர்வுகள் எழுதுவது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், சட்ட விழிப்புணர்வில் பாரத் சட்டக் கல்லூரி துணை பேராசிரியர்கள் சோபியா, யுவன் சங்கர் மற்றும் மாணவ மாணவியர்கள், வனக்காப்பாளர் குணசேகரன் உட்பட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர். ரீடு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, கள ஒருங்கிணைப்பாளர் சசி ஆகியோர் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர்.