ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்க 31ம் தேதி கடைசி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் 2022ம் ஆண்டுக்கான உரிமத்தை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும்.;
பைல் படம்.
ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வினோத்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் வரும், 2022ம் ஆண்டுக்கான உரிமத்தை, ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும்.
தாமதமாக பெறப்படும் விண்ணப்ப படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஒப்பந்த தொழிலாளர் சட்டம் மற்றும் வெளி மாநில தொழிலாளர் சட்ட பதிவு சான்றுகளுக்கும், இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு, 0424-2219521 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.