இன்டா நியூஸ் எதிரொலி : பொது நிலத்தை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
கிருஷ்ணாபுரம் காலனியில் பொது நிலத்தை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், வீட்டுமனை வழங்கப்பட்டது. இதில் 8 சென்ட் நிலம் அம்பேத்கர் வாசக சாலை என பொது நிலம் வழங்கப்பட்டதாக, கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த நபருக்கு நிலத்தை விற்பனை செய்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பொது நிலத்தை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிக்கப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில், உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள மாதேஸ்வரன் கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கு முன்பு, வழங்கப்பட்ட பொது நிலத்தை ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் ஆக்கிரப்பு செய்துள்ளதாகவும், இதுகுறித்து, உரிய அதிகாரிகளிடம் தெரிவித்த உள்ளதாகவும் தெரிவித்திருப்பதாகவும், அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை .இதனை கண்டித்து, ஊர் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக, தெரிவித்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதுகுறித்து இன்டாநியூஸ் தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.