காதல் திருமணம் செய்த ஒரே ஆண்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

அந்தியூர் அருகே காதல் திருமணம் செய்த, ஒரே ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை, கோபி கோட்டாட்சியர் விசாரணை.;

Update: 2022-05-04 15:00 GMT

திவ்யதர்ஷினி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25).இவர் அந்தியூர் அடுத்துள்ள குரும்பபாளையம் மேடு பகுதியை சேர்ந்த திவ்யதர்ஷினி (19) என்ற பெண்ணை கடந்த ஒரு ஆண்டு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதியில் வசித்து வந்த நிலையில் திவ்யதர்ஷினி நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சென்ற அந்தியூர் போலீசார் திவ்யதர்ஷினி சடலத்தை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆவதால் மேல் விசாரணையை கோபி கோட்டாட்சியர் பழனிதேவி நடத்தி வருகின்றார். காதல் திருமணம் செய்த ஓர் ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News