ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆடை வடிவமைப்புத் துறை மாணவர்கள் சாதனை

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆடை வடிவமைப்புத் துறை மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Update: 2024-04-16 14:30 GMT

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற. ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆடை வடிவமைப்புத் துறை மாணவர்களை கல்லூரியின் தாளாளர் தங்கவேல், முதல்வர் வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆடை வடிவமைப்புத் துறை மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஈரோடு அடுத்த திண்டல் அருகே நஞ்சனாபுரத்தில் செயல்படும் கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறை மாணவர்கள், மதுரை லேடி டோக் மகளிர் கல்லூரி, கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி, திருப்பூர் சசூரி கல்லூரி குழுமங்கள், நிப்டி ஆடை வடிவமைப்பு கல்லூரிகளில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். 

இதேபோல், ஈரோடு வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல் கே.எஸ்.ஆர். கல்வி குழுமங்கள், திருச்சியில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் நடத்திய பேஷன் ஷோ மற்றும் விவேகானந்தா மகளிர் கலை அறிவியல் கல்லூரிகளில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு மற்றும் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

இவ்வாறாக, பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் ரூ.62,950 ரொக்கப் பரிசினை ஆடை வடிவமைப்புத் துறை மாணவர்கள் கைப்பற்றியுள்ளனர். இம்மாணவர்களை கல்லூரியின் தாளாளர் தங்கவேல், கல்லூரி முதல்வர் வாசுதேவன், துறைத்தலைவர் மஞ்சுளா மற்றும் பேராசிரியர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனார்.

Tags:    

Similar News