சத்தியமங்கலத்தில் பழங்குடியினருக்கான வேலை வாய்ப்பு திறன் வழிகாட்டி நிகழ்ச்சி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பழங்குடியினர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் வழிகாட்டி பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
சத்தியமங்கலத்தில் பழங்குடியினர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் வழிகாட்டி பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டி பயிற்சியை தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் நடத்தியது.
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜ கோபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசினார்.
பயிற்சியில் கடம்பூர், குன்றி, அந்தியூர், பர்கூர் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் இருந்து 10, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளங்கலை, முதுகலை படித்த மாணவ, மாணவியர்கள் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் டி.எம்.டபிள்யூ., கம்பெனி நிர்வாகத்தினர் திறன் மேம்பாட்டுக் கழகத்தினர் மாணவர்களுக்கு வழிகாட்டி பயிற்சியை பற்றி விளக்கி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறையினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிதிராவிடர் நலத்துறையினருடன் இணைந்து சுடர் அமைப்பு நடராஜ், பரண் அமைப்பு கென்னடி, தன்னார்வ சேவை நிறுவத்தினர் செய்திருந்தனர்.