அதிமுகவை வழி நடத்துவது குறித்து தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்- சசிகலா
அதிமுகவை யார் வழிநடத்த வேண்டும் என்பதை அதிமுகவில் உள்ள ஒன்றறை கோடி தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.;
தமிழகத்தில் தொடர்ந்து ஆன்மிக சுற்றுபயனம் மேற்கொண்டு வரும் வி.கே.சசிகலா தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக நேற்று இன்றும் மேற்கு மண்டலத்தில் சுற்றுபயனணம் மேற்கொண்டு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்த வி.கே.சசிகலாவிற்கு 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் பூரணகும்ப மரியாதையுடன், மேளதாளங்கள் முழுங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து அத்தாணி பிரிவில் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, தனக்கு தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி கூறினார்.
பின்னர் எம்ஜிஆர்,ஜெயலிலதா வழியில் தான் தனது பயணம் இருக்கும் என்று தெரிவித்த அவர் தனக்கென பாதை அமைத்து கொள்ளபோவதில்லை என்றார். மேலும், அதிமுகவை யார் வழி நடத்த வேண்டும் என அதிமுகவில் உள்ள ஒன்றறை கோடி தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து வெற்றி பெற்று விரைவில் தமிழகத்தில் நமது ஆட்சி நடைபெறும் என்றார்.