சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் நாளை மனுநீதி நாள் முகாம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் சத்தியமங்கலம் அருகே குத்தியாலத்தூர் கிராமம் கடம்பூரில் நாளை (மார்ச் 12ம் தேதி) மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் சத்தியமங்கலம் அருகே குத்தியாலத்தூர் கிராமம் கடம்பூரில் நாளை (மார்ச் 12ம் தேதி) மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான மனுநீதிநாள் முகாம், சத்தியமங்கலம் அருகே உள்ள குத்தியாலத்தூர் கிராமம் கடம்பூர் டான் போஸ்கோ மாணவர் இல்லத்தில் நாளை (புதன்கிழமை) பகல் 11 மணிக்கு நடக்கிறது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்குகிறார்.
இந்த முகாமில், அனைத்து துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள். எனவே, பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.