ஈரான் அதிபர் மறைவு: ஈரோட்டில் அரைக் கம்பத்தில் பறந்த தேசியக்கொடி

ஈரான் அதிபர் மறைவையொட்டி, ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

Update: 2024-05-22 03:30 GMT

ஈரான் அதிபர் மறைவையொட்டி ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது.

ஈரான் அதிபர் மறைவையொட்டி, ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராகிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் அதிபர் இப்ராகிம் ரைசி, அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஹுசைன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.

ஈரான் அதிபர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி நேற்று அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் கட்டப்பட்டது. இதுபோல் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், ரயில்வே நிலையத்திலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News