ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படையில் காலிப்பணியிடங்களுக்கு‌ விண்ணப்பிக்க அழைப்பு

Oor Kaval Padai-ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 67 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-09 11:45 GMT

பைல் படம்

Oor Kaval Padai-ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 67 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படையில் ஆண்கள் 58 பேர், பெண்கள் 9 பேர் என மொத்தம் 67 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப 20 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்குட்பட்ட 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நல்ல உடற்தகுதி உள்ளவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவங்களை ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்திலோ அல்லது  ஆன்லைன் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைன் லிங்க் மூலமாகவோ அல்லது மாவட்ட ஊர் காவல் படை அலுவலகத்தில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் மற்றும் வலைதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தொலைபேசி எண்கள்:- 94981–14806, 83000–19494 ,வலைதள முகவரி :- erodehomeguard@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட காவல் துறை சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பணியிடங்களுக்கு சேவை மனப்பான்மை இருக்க வேண்டும். இதற்கான மாத ஊதியம் கிடையாது. பணி நாட்களுக்கான தொகுப்பு ஊதியம் மட்டும் வழங்கப்படும். 45 நாட்கள் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் தங்கி பயிற்சி எடுக்க வேண்டும். விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய முகவரி:- https://drive.google.com/file/d/1BksPIIMzL7g5-P8z5fqejvuMMzHUeyYA/view?usp=sharing

தற்போது, வேலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஈரோடு மாவட்டத்தில் இருந்து போலீசார், ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்கள் 100க்கும் மேற்பட்டோர் தனித்னியாக போலீஸ் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ஊர்காவல்படையை சேர்ந்த 15க்கும் மேற்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டதாகவும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக வேலூர் மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்ட காவல் துறைக்கு புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 4 மாதமாக விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு சென்ற ஊர்க்காவல் படையை சேர்ந்த 15 பேர் மற்றும் சரிவர பணிக்கு வராத 35க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்திட தேவையான நடவடிக்கையை எஸ்பி சசி மோகன் மேற்கொண்டார். இதுதொடர்பாக நேற்று சம்மந்தப்பட்ட ஊர்க்காவல் படையை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் ஈரோடு எஸ்பி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு போலீஸ் அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஒழுங்கினம் மற்றும் சரிவர பணிக்கு வராத ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்களிடம் அதிகாரிகள் விளக்க கடிதம் எழுதி வாங்கி, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதன் காரணமாகதான் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டரங்கள் தகவல் தெரிவித்தனர். 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News