பவானி அருகே கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட வாலிபர்: உறவினர்களிடம் விசாரணை

ஈரோடு மாவட்டம் பவானி அருகே கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட வாலிபரின் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.;

Update: 2025-03-15 10:50 GMT

மதியழகன்.

பவானி அருகே கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட வாலிபரின் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜல்லிக்கல்மேடு பகுதியில் காவிரி ஆற்றில் ஆண் பிணம் மிதப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆற்றில் மிதந்த உடலை மீட்டனர்.

அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம், நெஞ்சு பகுதியை பிளந்து அதில் கல்லை வைத்தும் கட்டி இருந்தனர். இதனால் பிணமாக கிடந்த வரை கொடூரமாக கொலை செய்து அவரது உடலை ஆற்றில் வீசி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்டவர் யார்? என்பதை கண்டறியவும், கொலையாளிகளை பிடிக்கவும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்தநிலையில், தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பவானியை அடுத்த தொட்டிபாளையத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் மதியழகன் (வயது 30) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, மதியழகனை கொலை செய்தது யார் என்பது குறித்து அடுத்த கட்ட விசாரணையை போலீ சார் உடனடியாக தொடங்கினர். இதில் மதியழகனின் மனைவி கீர்த்திகா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கீரித் திகா தன்னுடைய ய சாவுக்கு கணவர் மதியழகன், மாமியார், மாமனார், மதியழகனின் அண்ணன், தாய்மாமன் ஆகிய 5 பேர் தான் காரணம் என எழுதி வைத்திருந்திருந்தார்.

கீர்த்திகாவின் கடிதத்தை வைத்து மதியழகன் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளிவந்து பவானி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தான் மதியழகன் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மதியழகன் தன்னுடைய குடும்பத்தினருடனும் கீர்த்திகாவின் பெற்றோரிடமும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மதியழகன் மீது வேறு சில வழக்குகளும் உள்ளதாக தெரிய வந்து உள்ளது. இது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மதியழகன் மற்றும் கீர்த்திகாவின் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மதியழகனை யார் கொலை செய்தது. அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது உறவினர்களிடமும் தொட ர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News