ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு தொடங்கியது!

ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு நேற்று (மே.15) தொடங்கியது.;

Update: 2025-05-16 01:20 GMT
ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு தொடங்கியது!
  • whatsapp icon

ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு நேற்று (மே.15) தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்கூட சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து கடந்த மாதம் 28ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதைத் தொடர்ந்து, மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் சமையல் உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு நேற்று தொடங்கியது. தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவழைக்கப்பட்டு வருகிற 21ம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.

ஈரோடு, அம்மாபேட்டை, மொடக்குறிச்சி வட்டாரங்களில் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு நேற்று நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 93 பேர் கலந்து கொண்டனர்.

Similar News