புற்றுநோயாளிகள் காப்பகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிலை திறப்பு
கொரோனோ மூன்றாவது அலை வந்தாலும் அதன் பாதிப்புகள் குறைவாகத்தான் இருக்கும்
இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் இமயம் புற்றுநோயாளிகள் காப்பகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சிலையை இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் ஜெயலால் திறந்து வைத்தார்.
பின்னர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: கிராமங்கள் தோறும் சென்று புற்றுநோய் கண்டறியும் நடமாடும் பேருந்து சேவை ஏற்படுத்தும் முயற்சியில் இந்திய மருத்துவ சங்கம் ஈடுபட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனோ காலத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில், 2000 மருத்துவர்கள் உயிழந்துள்ளனர்.
கொரோனோ மூன்றாவது அலை வந்தாலும் அதன் பாதிப்புகள் குறைவாகத்தான் இருக்கும். அதற்கு காரணம் அனைவரும் தடுப்பூசி செலுத்தியது தான். ஒரு மில்லியன் அளவு கொரோனோ தடுப்பூசியை கிராமங்கள் மற்றும். மலைவாழ் பகுதிக்கு கொண்டு செல்ல அரசுடன் இணைந்து இந்திய மருத்துவ சங்கம் செயல்படும் என பிரதமரிடம் வாக்குறுதி கொடுத்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை பொருத்த வரையில் கடந்த அரசும் சரி இந்த அரசும் சரி மிக சிறப்பாக செயல்படுவதாக ஜெயலால் தெரிவித்தார்.