108 ஆம்புலன்ஸ் வேலை வாய்ப்பு: ஈரோட்டில் நவ.30ம் தேதி நேர்முகத் தேர்வு

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புணர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு வரும் 30ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.

Update: 2024-11-27 10:45 GMT

108 ஆம்புலன்ஸ்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புணர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு வரும் 30ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.

ஈரோடு 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-  

108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புணர் மற்றும் ஓட்டுநர் பணியிடத்துக்கு வரும் நவ.30ம் தேதி காலை 11:30 மணி முதல் 2 மணி வரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டிபி ஹாலில் நேர்முகத் தேர்வு நடக்கிறது.

அவசர கால மருத்துவ நுட்புணர் பணிக்கு அடிப்படைத் தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (12 ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ், பிஎஸ்சி, ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு தேர்வு அன்று 19க்கு குறையாமலும் 30க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.  மாத ஊதியம் ரூ.16,020 மொத்த ஊதியமாக வழங்கப்படும்.

ஓட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும். ஆண், பெண் இரு பலரும் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேஜ் வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரி பார்ப்பதற்காக கொண்டு வர வேண்டும். *மாத ஊதியம் ரூ.15,820 மொத்த ஊதியமாக வழங்கப்படும்.

ஓட்டுநர் பணிக்கு எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு மனித வளத்துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும். அவசர கால மருத்துவ நுட்புணர் பணிக்கு எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான, மற்றும் மனித வளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். முகாமில், தேர்வு செய்யப்படுபவர்கள் 45 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

மேலும், விவரங்கள் அறிய 044-28888060, 7397724813 , 73388 94971,89259 41108 எண்களை தொடர்பு கொள்ளலாம்.‌ இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News