ஈரோடு அரசு மருத்துவமனையில் சர்வதேச கதிரியக்கவியல் தினம் அனுசரிப்பு
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உலக கதிரியக்கவியல் தினம் நவம்பர் 8-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது.;
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உலக கதிரியக்கவியல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
உலக கதிரியக்கவியல் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 8-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்றைய நவீன மருத்துவத் துறையில் மருத்துவப் படிமவியலின் சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8ஆம் தேதி சர்வதேச கதிரியக்கவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மேலும் வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவர் 1895ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்த இத்தினம் நினைவாக 2012ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கதிரியக்கவியல் துறை தலைவர் டாக்டர்.பி.சிவக்குமார், மருத்துவர் எஸ்.ஹாரிஸ்ப்ரியா, முதன்மை நுண்கதிர் நுட்புணர் ஆர்.பிரபாகரன் மற்றும் நுண்கதிர் நுட்புணர்கள் ம.நாகராஜன், அ.சதீஸ்குமார், ரமேஷ் ,சா.அருண்குமார், முனியப்பன், முனிராஜ் , மோகன் ராஜ் , ல.தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் வில்லியம் ராண்ட்ஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.