பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.7 லட்சம் ரொக்கப்பரிசு
International Contest Cash Award ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சர்வதேச அளவிலான இன்னோவேஷன் கான்டெஸ்ட்டில் ரூ.7 லட்சம் ரொக்கப்பரிசை வென்றனர்.;
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சர்வதேச அளவிலான இன்னோவேஷன் கான்டெஸ்ட்டில் ரூ.7 லட்சம் ரொக்கப்பரிசை வென்றனர்.
International Contest Cash Award
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சர்வதேச அளவிலான இன்னோவேஷன் கான்டெஸ்ட்டில் ரூ.7 லட்சம் ரொக்கப்பரிசை வென்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கேபிஐடி டெக்னாலஜிஸால் நடத்தப்பட்ட, ஸ்பார்க்கில் 2024 (10வது பதிப்பு) என்ற சர்வதேச அளவிலான இன்னோவேஷன் கான்டெஸ்ட்டில், உலகெங்கிலும் உள்ள 433 நிறுவனங்களில் 19,765 பங்கேற்பாளர்களிடமிருந்து 1,324 பெற்றது. யோசனைகளில் அவற்றில் 8 யோசனைகள் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
இந்த 8 அணிகளில் ஒன்றாக பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஜிரெக்ஸ் என்ற அணி பங்கேற்றது. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் .நித்தியானந்தன் வழிகாட்டுதலின் கீழ் ரூபக்பி, வெங்கடேஷ்டி, மனோஜ்சி, தர்ஷனா எஸ்.ஆர் மற்றும் ஹரிஹரசுதன்ஜி ஆகியோர் இந்த குழுவில் பங்கேற்றனர். ஜி ரெக்ஸ் குழுவால் "ஆன்போர்டு ஹைட்ராக்ஸி வாயு உற்பத்தி அமைப்பு” என்ற தலைப்பில் திட்ட யோசனை முன்மொழியப்பட்டது. அவர்கள் மிகவும் மதிப்புமிக்க பிளாட்டினம் விருதை ரூ.7 லட்சம் ரொக்கப்பரிசுடன் வென்றனர்.
கல்லூரியின் தாளாளர் இளங்கோ, முதல்வர் பாலுசாமி, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறைத்தலைவர் ஜெகதீசன் மற்றும் ட்ரிப்பிள் ஈ துறைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் வெற்றி பெற்ற குழுவினரை பாராட்டினர். விழாவின் சிறப்பு விருந்தினர்களிடம் இருந்து கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பரிசு பெற்றுக் கொண்டனர்.