அந்தியூர் பகுதியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம்

அந்தியூர் பகுதியில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-01-01 10:15 GMT
தயார் நிலையில் உள்ள பொங்கல் பானைகள்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி,  ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியிலுள்ள, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பானை மற்றும் கால்நடை உருவத்திலான பொம்மைகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல், வெள்ளித்திருப்பூர் ஆலாம்பாளையம். எண்ணமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். தை பொங்கலை முன்னிட்டு, பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பொங்கல் பானைகளை அந்தியூர் சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் பானைகளை வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து பானை வியாபாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்கு மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் மண் பானை தயாரித்து விற்கிறோம். ஆனால், பொங்கல் பண்டிகைக்குதான், வியாபாரம் அதிகம் நடக்கும். இதனால் நாங்களும் வழக்கத்தை விட, அதிக அளவில் தயாரிக்கிறோம். ரகம் வாரியாக பானைகள் உள்ளன. கலர் பூசிய பானைகள், பூசாத பானைகளை, மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். அரைப்படி முதல், ஐந்து படி வேகக்கூடிய பானைகள் உள்ளன. ஒரு பானை, 50 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை விற்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News