பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை அனுப்பும் பணி தீவிரம்
ஈரோடு மாவட்டத்திற்கு 1.32 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.;
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஏழைகள், விதவைகள், ஆதரவற்றோருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திற்கு 1.32 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலை ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் 48 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கத்தில் 6,974 விசைத்தறிகள் மூலம் 69 லட்சத்து 74 ஆயிரத்து 170 வேட்டிகள், 8,320 விசைத்தறிகள் மூலம் 62 லட்சத்து 39 ஆயிரத்து 673 இலவச சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 80 சதவீத வேட்டி உற்பத்தி செய்யப்பட்டு அரசு வழிகாட்டுதல்படி பல்வேறு ஊர்களுக்கும், வெளி மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதேபோல், இலவச சேலை உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.