ஈரோடு மாவட்டத்தில் 4 வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

அந்தியூர் அருகே உள்ள வனச்சரகங்களில் வன விலங்குகள் மற்றும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.;

Update: 2021-12-02 10:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அந்தியூர், பர்கூர், தட்டகரை,  சென்னம்பட்டி என நான்கு பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் வன விலங்குகள் மற்றும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதன் அடிப்படையில் உலக வனவிலங்குகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு புலிகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதில் உலக வனவிலங்குகள் பாதுகாப்பு இயக்க தன்னார்வலர்கள் மற்றும் அந்தியூர், பர்கூர், தட்டகரை , சென்னம்பட்டி ஆகிய வனச்சரகங்களை சேர்ந்த வனத்துறையினர் கலந்து கொண்டனர்

இதுகுறித்து உலக வனவிலங்குகள் பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவிக்கையில், புலிகளின் கால்தடங்கள் மற்றும் எச்சங்கள் ஆகியவைகளைக் கொண்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், புலிகளின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தனர். இந்த கணக்கெடுக்கும் பணியில் ஒவ்வொரு வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வனச்சரகத்திலும் 3 நாட்கள் வீதம் கணக்கு எடுக்கும் பணி நடைபெறும் என தெரிவித்தனர். அப்பொழுது அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்தர சாமி பர்கூர் வனச்சரக அதிகாரி மணிகண்டன் தட்டகரை வனச்சரக அதிகாரி  பழனிச்சாமி சென்னம்பட்டி வனச்சரக அதிகாரி செங்கோட்டையன் மற்றும் வனத்துறையினர் கணக்கெடுக்கும் பணியின் போது உடன் இருந்தனர்

Tags:    

Similar News