நம்பியூர் அருகே குட்டையில் மூழ்கிய மெக்கானிக் மாயம்
நம்பியூர் அருகே செல்லிபாளையம் குட்டையில் மூழ்கி மாயமான மெக்கானிக்கை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.;
நம்பியூர் அருகே உள்ள செல்லிபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24). இவர் அதே பகுதியில் இருசக்கர பழுது பார்க்கும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் செல்லிபாளையம் பகுதியில் உள்ள குட்டையில், நண்பர்கள் சிலருடன் நேற்று மதியம் குளிக்க சென்றுள்ளார். அப்போது குளத்தின் ஒரு கரையில் இருந்து மற்றோரு கரைக்கு நீச்சல் அடித்து கடக்க முயன்றபோது, சக்திவேல் தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதனையடுத்து குளத்தில் மூழ்கி மயமான சக்திவேலை தேடும் பணியில் நம்பியூர் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.