கோபிசெட்டிபாளையத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
கோபி, பவானி, சத்தி பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளின் வாகனங்களை கோபி கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார்.;
கோபி வட்டார போக்குவரத்து துறையின் எல்லைக்கு உட்பட்ட கோபி, சத்தி, பவானி பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளின் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
கோபி கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷினி, கோபி வட்டார போக்குவரத்து அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர். பேருந்துகளில் அவசர கால வழி, தீயணைக்கும் கருவி, பேருந்தின் தரைதளம், இருக்கைகள், பிடிமானங்கள், படிக்கட்டுகள் என ஆய்வு செய்தனர். மொத்தம் 402 வாகனங்கள் ஆய்வு செய்ததில், 380 வாகனங்கள் தகுதியானதாக உறுதி செய்யப்பட்டது. 22 வாகனங்களை விரைவில் சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.