ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறைத்துறையின் சார்பில், ஆறாவது சுற்று தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் இன்று (டிச.16) துவங்கியது.

Update: 2024-12-16 12:15 GMT

மொடக்குறிச்சி ஒன்றியம், நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி, தம்பிரான் வலசு கிராமத்தில் நடந்த கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் எஸ்.பாஸ்கர் துவக்கி வைத்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறைத்துறையின் சார்பில், ஆறாவது சுற்று தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் இன்று (டிச.16) துவங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறைத்துறையின் சார்பில், ஆறாவது சுற்று தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் இன்று துவங்கியது.


அதன்படி, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சியில் உள்ள தம்பிரான்வலசு கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இந்த முகாமை, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் எஸ்.பாஸ்கர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

இம்முகாமில் 150 கால்நடைகளுக்கு தடுப்பூசி மேற்கொள்ளப்பட்டது. மேலும் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28,550 கால்நடைகளுக்கு 11 குழுக்கள் மூலம் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படவுள்ளது. 


இம்முகாமில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பி.யுவரேகா, உதவி இயக்குநர்கள் மரு.எத்திராஜன், மரு.ராமசாமி, மரு.கண்ணன், மரு.சக்திவேல் மரு.சசிக்குமார் உட்பட கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு தடுப்பூசி பணியினை மேற்கொண்டனர்.

Similar News