பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,600 கன அடியாக சரிவு
பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 15,600 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 15,000 கன அடியாகவும் உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (11.08.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 102.00 அடி ,
நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 15,600 கன அடி,
நீர் வெளியேற்றம் - 15,000 கன அடி (பவானி ஆற்றில் 14,500 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது).
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.