பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,781 கன அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (12ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,781 கன அடியாக சரிந்தது.

Update: 2024-08-12 04:30 GMT

பவானிசாகர் அணைப் பகுதி.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (12ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,781 கன அடியாக சரிந்தது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை விளங்குகிறது. 105 அடி நீர்மட்ட உயரமுள்ள இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. 

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், அணைக்கான நீர்வரத்து அதிகரித்தும், குறைவதுமாக இருந்து வருகிறது. 

அணைக்கு நீர்வரத்து நேற்று (11ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,986 கன அடியாக இருந்த நிலையில், இன்று (12ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,781 கன அடியாக குறைந்தது. 

அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 95.76 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 95.82 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 25.53 டிஎம்சியிலிருந்து 25.58 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 900 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,005 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 1.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News