பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,126 கன அடியாக சரிவு
பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (5ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,024 கன அடியிலிருந்து 1,126 கன அடியாக சரிந்தது.;
பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (5ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,024 கன அடியிலிருந்து 1,126 கன அடியாக சரிந்தது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்ட முக்கிய அணையாகும். பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால், சமீபகாலமாக அணையின் நீர்வரத்து சரிந்து வருகிறது.
நேற்று (4ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,024 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (5ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,126 கன அடியாக சரிந்தது. அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 94.70 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 94.93 அடியாக உயர்ந்தது.
அதேபோல், அணையில் நீர் இருப்பு 24.77 டிஎம்சியிலிருந்து 24.94 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 955 கன அடி நீரும் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,055 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.