அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு இன்று மறைமுகத்தேர்தல்

அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது.;

Update: 2022-05-25 04:30 GMT

அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி தேர்தலில் 13 இடங்களை திமுகவும் இரண்டு இடங்களை அதிமுகவும் தலா ஒரு இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை கைப்பற்றின.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாண்டியம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினம் நடக்கவிருந்த துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இன்று மதியம் 2 மணிக்கு பேரூராட்சித் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News