அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் பதவியேற்பு
அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் உள்ள மொத்தம் 18 வார்டுகளுக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 22ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில், தி.மு.க.வை சேர்ந்த 15 வேட்பாளர்களும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலா ஒரு வேட்பாளரும், அ.தி.மு.க, சுயேச்சை சார்பில் போட்டியிட்ட தலா ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.இந்நிலையில் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடந்த கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவில், பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு வெற்றி பெற்றவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து, கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக் கொண்ட தி.மு.க.வைச் சேர்ந்த பாண்டியம்மாள், பழனிச்சாமி, டி.எஸ். சண்முகம், மணிகண்டன், யாஸ்மின் தாஜ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், அந்தியூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி .வெங்கடாசலத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதைத் தொடர்ந்து பேரூராட்சி கூட்ட அரங்கில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் முதல் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.