சத்தியமங்கலத்தில் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு அணி தொடக்க விழா, கோரிக்கை விளக்க பேரணி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு அணி தொடக்க விழா மற்றும் கோரிக்கை விளக்க பேரணி நடைபெற்றது.;
சத்தியமங்கலத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு அணி தொடக்க விழா மற்றும் கோரிக்கை விளக்க பேரணி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு அணி தொடக்க விழா மற்றும் கோரிக்கை விளக்க பேரணி மாநில ஒருங்கிணைப்பாளர் கிரி தலைமையில் நடைபெற்றது. கோரிக்கை விளக்க பைக் பேரணியை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க வடக்கு மாவட்ட செயலாளர் நடராஜன் துவக்கி வைத்தார். இ-சேவை மைய அலுவலகத்தை மலர் சாகுபடி விவசாயிகள் சங்க செயலாளர் சிவலிங்கம் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, மாநில தலைவர் சண்முக சுந்தரம்,மாநில பொதுசெயலாளர் முத்து விஸ்வநாதன், ஐந்துனை வேலுச்சாமி, வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் ஜோதி அருணாச்சலம், இயற்கை விவசாயிகள் அணி, மாநில துணை செயலாளர் மோகன், நகர செயலாளர் குபேந்திரன்,உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில் ஆந்திர அரசு அறிவித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை 6,000 முதல் 15,000 வரை வழங்குவதை போல் தமிழ்நாட்டிலும் உதவித்தொகை வழங்க அரசாணை வெளியிட கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கூட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு, நாமக்கல் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள். நமது குழுவில் இணையுங்கள். Click Now