பவானி அருகே வி.சி.க. சார்பில் அம்பேத்கர் படிப்பக கட்டிட பணி துவக்க விழா

பவானி அருகே உள்ள பெரியபுலியூரில் வி.சி.க. சார்பில்அம்பேத்கர் படிப்பக கட்டிட பணி துவக்க விழா நடைபெற்றது.;

Update: 2022-05-16 10:45 GMT

பவானியில் அம்பேத்கர் படிப்பக கட்டிட பணி துவக்க விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பெரியபுலியூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், புரட்சியாளர் அம்பேத்கர் படிப்பகம் அமைப்பதற்கான கட்டுமான துவக்க விழா நேற்று நடைபெற்றது.மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் ஆற்றலரசு வரவேற்பு உரை நிகழ்த்தினார். அம்பேத்கர் மிசா.தங்கேவல் சாதித் முன்னிலை வகித்தார்.


தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில்  தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் அம்பேத்கர் படிப்பகம் அமைப்பதற்கான தேவைகள் மற்றும் பயன்கள் எடுத்து கூறப்பட்டது.நூலகத்தில் அம்பேத்கர் உள்ளிட்ட வரலாற்று தலைவர் புத்தக படைப்பு இடம் பெறுவதுடன் போட்டி தேர்விற்கு கலந்து கொள்பவர்களுக்கான புத்தகம் இடம் பெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News