முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று (டிச.19) நடைபெற்றது.
ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று (டிச.19) நடைபெற்றது.
ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று (டிச.19) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், அறிவிப்புகள், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு மாநகராட்சி ஆணையர் மரு. மனிஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.