அந்தியூரில், பர்கூர் காவல்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சினர் ஆர்ப்பாட்டம்

அந்தியூரில், பர்கூர் காவல்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-27 08:45 GMT

அந்தியூரில், பர்கூர் காவல்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சினர் ஆர்ப்பாட்டம் 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை கிராமம், கோவில் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்கின்ற மாற்றுத்திறனாளி. கடந்த 17ம் தேதி, அவரது வீட்டுக்குள் புகுந்த அவரது உறவினர்கள் கை கால்களை கட்டி தூக்கி சென்று நிர்வாணப்படுத்தி உடலின் மின்சாரம் பாய்ச்சி மிளகாய் பொடி கரைசலை ஊற்றி கடுமையாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அவரது மனைவி மாதேவி என்பவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த மாற்றுத்திறனாளி செல்வம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பர்கூர் போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

வாக்குமூலம் பெற்ற பர்கூர் போலீசார் முறையான விசாரணை மேற்கொண்டு உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல், சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், எனவே கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது முறையான வழக்கு பதிவு செய்தும், எதிரிகளுக்கு சாதகமாக செயல்பட்ட பர்கூர் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சு வார்த்தை நடத்திய அந்தியூர் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் 15 நாட்களுக்குள் முறையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், அந்தியூர் வட்டாட்சியரிடம் மனு வழங்கிய பின் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News