அந்தியூரில் வரி செலுத்தாத வாகனங்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிப்பு

அந்தியூர் பகுதியில் நடந்த வாகன சோதனையின்போது, வாகன வரி செலுத்தாத வாகனங்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-05-25 01:35 GMT

அந்தியூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா பஸ் நிலையம் ஆகிய இடங்களில் நேற்று மாலை பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.அப்போது அந்தியூர் பஸ் நிலையத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளை ஆய்வு செய்த மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி, காற்று ஒலிப்பான்களை அகற்றியதுடன், காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதேபோல் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானாவில் நடந்த ஆய்வின் போது தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை நிறுத்தி, காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என சோதனை செய்தார்.மேலும், அப்பகுதியில் மண் பாரம் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, அதிகப்படியான பாரம் ஏற்றியது கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல், வாகன வரி செலுத்தாமை, பர்மிட் இல்லாமை, வாகன உரிமம் ஓட்டுனர் உரிமம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அபராதம் வசூலிக்கப்பட்டது.இன்று மாலை சுமார் 20க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்யப்பட்ட நிலையில், 80,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.அப்போது அந்தியூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் உள்ளிட்ட போக்குவரத்து போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News