நம்பியூர் அருகே சட்டவிரோதமாக சாராயம் விற்றவர் கைது: போலீசார் அதிரடி
நம்பியூர் அருகே சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
பைல் படம்.
ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள கெட்டிச்செவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பதாக நம்பியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு ஒருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த பொங்கியண்ணன் என்கிற பாஸ்கர் (வயது 49) என்பதும், அந்த பகுதியில் அவர் நின்று கொண்டு சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பொங்கியண்ணனை கைது செய்தனர்.