பவானியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது‌

ஈரோடு மாவட்டம் பவானியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-21 01:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானியில் பண்டார அப்பிச்சி கோயில் பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் டாஸ்மாக் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், பவானி உதவி ஆய்வாளர் ரகுநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு ஆகியோர்  திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அரிசிப் பையில் மறைத்து வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த பவானி பழனிபுரம், முதல் வீதியைச் சேர்ந்த வேலு மகன் கண்ணன் (வயது 44) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து, 44 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News