அந்தியூர்: மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை
அந்தியூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
லோகநாதன்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம்புதூர் காலனியை சேர்ந்தவர் வடிவேல் மகன் லோகநாதன் (வயது 26) தனியார் மருத்துவமனையில் வாட்ச்மேன். லோகநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு தன்னை யாரோ அழைப்பதாக கூறிக்கொண்டு இருந்துள்ளார். பின்னர், இன்று காலை அதே பகுதியில் உள்ள பொது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற அந்தியூர் தீயணைப்பு துறையினர் மற்றும் அந்தியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.