ஈரோட்டில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு நடைபெற்ற சிறப்பு முகாமில், உடனடி தீர்வாக 7 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

Update: 2024-06-21 13:00 GMT

திருநங்கைகள் நலனுக்கான சிறப்பு முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடி தீர்வாக அடையாள அட்டையினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இன்று (21ம் தேதி) திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில், விண்ணப்பித்தவர்களுக்கு உடனடி தீர்வாக 7 திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அடையாள அட்டைகளை வழங்கினார்.

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு உதவிடும் பொருட்டு இதர நலத்திட்ட உதவிகள் வழங்கும் துறைகளுடன் ஒருங்கிணைந்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை விடுபட்டவர்களுக்கு வழங்கிட சிறப்பு முகாம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன்படி, இன்று (21ம் தேதி) நடைபெற்ற சிறப்பு முகாமில் புதிய திருநங்கை அடையாள அட்டை வேண்டி 14 திருநங்கைகளும், ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய 16 திருநங்கைகளும், புதிய வாக்காளர் அட்டைக்கு 10 திருநங்கைகளும், வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய 12 திருநங்கைகளும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் புதியதாக 8 திருநங்கைகளும் என மொத்தம் 60 திருநங்கைகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் உடனடி தீர்வாக 7 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

இம்முகாமில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மனிஷ், மாவட்ட சமூகநல அலுவலர் சண்முக வடிவு உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News