பவானி அருகே குடிசை வீடு தீப்பிடித்து விபத்து
பவானி அருகே குடிசை வீடு தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மைலம்பாடி சடையப்ப கவுண்டர் மேடு பகுதியை சேர்ந்தவர் கோமதி. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், தனது 2 மகன்களுடன் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. பின்னர் மளமளவென தீப்பிடித்தது.
இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் கூறினார்கள். இந்த தீவிபத்து குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.