அம்மாபேட்டை அருகே மகன், மனைவியை காணவில்லை என போலீசில் கணவர் புகார்

அம்மாபேட்டை அருகே 5 வயது மகனுடன் மனைவியை காணவில்லை என்று, கணவர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.;

Update: 2022-05-19 08:30 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கூத்தம்பட்டியை சேர்ந்தவர் நந்தீஸ்வரன். இவரது மனைவி யசோதா (26). இவர்களுக்கு குணேஸ்வரா (5) என்ற மகன் உள்ளார். கடந்த 13ம் தேதி,  யாசோதா மற்றும் மகன் குணேஸ்வரா ஆகியோர் வங்கியில் நகைக்கடன் செலுத்துவதற்காக,  சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள காவேரிபட்டி ஒக்கலிபட்டியில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து,வேலை முடிந்து 17ம் தேதி கணவரது வீட்டிற்கு செல்ல யாசோதா மகனுடன் கோனேரிப்பட்டி பிரிவில் இருந்து எடப்பாடி - பவானி செல்லும் பேருந்தில் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, நந்தீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News