ஈரோடு மாவட்டத்தில் மனித நேய வார விழா நாளை தொடக்கம்: ஆட்சியர் தகவல்
Humanity Week 2024 Celebration ஈரோடு மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான மனித நேய வார விழா ஜனவரி 24ம் தேதி (நாளை) முதல் ஜனவரி 30ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.;
பைல் படம்.
Humanity Week 2024 Celebration
ஈரோடு மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான மனித நேய வார விழா ஜனவரி 24ம் தேதி (நாளை) முதல் ஜனவரி 30ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் மனித நேய வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நாளை 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை 7 நாட் கள் மனிதநேய வார விழா கொண்டாடப்பட உள்ளது.
இம்மனித நேய வார விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற உள்ள விழாவில் நாடகம், நாட்டி யம், பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.மேலும் மனிதநேயம் விழிப்புணர்வு தொடர்பான சொற்பொழிவு, பேரணி மற்றும் பொது மக்களிடையே வன் கொடுமை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி. வன்கொடுமை தடுப்பு சட்டக் கூறுகள் குறித்து போலீசார், வழக்கறிஞர்கள், நீதிபதிகளை கொண்டு கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.