ஈரோட்டில் 2,263 பயனாளிகளுக்கு ரூ.13.96 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் முத்துசாமி வழங்கினார்!

ஈரோட்டில் 2,263 பயனாளிகளுக்கு ரூ.13.96 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று (ஏப்ரல் 14) வழங்கினார்.;

Update: 2025-04-15 10:10 GMT

ஈரோட்டில் 2,263 பயனாளிகளுக்கு ரூ.13.96 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று (ஏப்ரல் 14) வழங்கினார்.

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் சமத்துவ நாள் விழா நேற்று (ஏப்ரல் 14) நடைபெற்றது. இந்த விழாவில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு 2,263 பயனாளிகளுக்கு ரூ.13.96 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வே.செல்வராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அர்பித் ஜெயின், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள். தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News