அந்தியூரில் நாளை குதிரை ரேக்ளா எல்லை பந்தயம்

அந்தியூரில், உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நாளை, மாபெரும் குதிரை ரேக்ளா எல்லை பந்தயம் நடைபெற உள்ளது.

Update: 2021-12-18 12:45 GMT

கோப்பு படம் 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் திமுக ஒன்றியம் சார்பில்,  மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 44-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு,  குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற உள்ளது.

இப் போட்டியானது, அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள, சீதாலட்சுமி தியேட்டர் அருகில் உள்ள ஏஎல்எம்பி பெட்ரோல் பங்கில் இருந்து, முத்தரசன் குட்டை செக்போஸ்ட் வரை நடைபெறுகிறது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் போட்டியினை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைக்கிறார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலை வகிக்கிறார். 

Tags:    

Similar News