ஈரோட்டில் தசைச் சிதைவு நோய்க்கு இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்..!
தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் ஈரோட்டில் நடைபெற்றது.
Erode News, Erode Today News, Erode Live Updates - தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் ஈரோட்டில் நடைபெற்றது.
ஏற்றம் அறக்கட்டளை சார்பாக தசைச் சிதைவு நோயால் பாதிக்கபட்டவர்களுக்கான 33வது முறையாக இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள அரிமா சிறப்புப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமை நிறுவன தலைவர் ஆர்.மோகனசுந்தரம் தலைமையில் டாக்டர் ஜவகர் துவக்கி வைத்தார். அறக்கட்டளை அறங்காவலர்கள் டாக்டர் அருண்குமார் மற்றும் அருள்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இம்மருத்துவ முகாமை ஈரோடு ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கம் மற்றும் கோவை ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கம் மருத்துவர்கள் அரியவகை நோயான (Muscular dystrophy) தசைச் சிதைவு நோயால் பாதிக்கபட்டோர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட நோய் பாதிக்கபட்டவர்கள் சிகிச்சை பெற்றனர். இந்த அரியவகை நோயை குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், இம்மருத்துவ குழுவினரின் ஐந்து வருட தொடர் சிகிச்சையில் இந்நோயை பெருமளவில் கட்டுபடுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.