ஈரோடு மாவட்ட நீதிபதிகள் பணி இடமாற்றம்!

ஈரோடு மாவட்ட நீதிபதிகளை பணி இடமாற்றம் செய்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2025-04-29 10:40 GMT

ஈரோடு மாவட்ட நீதிபதிகளை பணி இடமாற்றம் செய்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி பிறப்பித்துள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகேசன், சென்னை 8-வது சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதியாகவும், தேனி பெரியகுளம் கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், ஈரோடு முதலாம் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜே.ஏ.கோகிலா திருப்பூர் மகளிர் நீதிமன்றம நீதிபதியாகவும், அவருக்கு பதிலாக கரூர் குடும்ப நல கோர்ட்டு நீதிபதி எஸ்.எழில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் சேலம் 2-வது மாவட்ட கூடுதல் நீதிபதி ஏ.எம்.ரவி பவானி 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும். ஈரோடு குடும்ப நல கோர்ட்டு நீதிபதி எஸ்.ஹேமா நெல்லை போக்சோ கோர்ட்டு நீதிபதியாகவும், தூத்துக்குடி குடும்ப நல நீதிமன்ற நீதிபதி வி.சுரேஷ் ஈரோடு 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், மதுரை குடும்ப நல கோர்ட்டு நீதிபதி வி.அனுராதா ஈரோடு குடும்பநல கோர்ட்டு நீதிபதியாகவும், கோபி 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி கே.தயாநிதி நாமக்கல் குடும்ப நல கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News