ஈரோட்டில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழை; 108 மில்லி மீட்டர் மழை பதிவு

Heavy Rain Fall -ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.;

Update: 2022-08-27 03:15 GMT

ஈரோடு ரயில் நிலைய சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

Heavy Rain Fall - ஈரோடு மாநகரில் பேருந்து நிலையம், காளை மாட்டு சிலை, ரயில் நிலையம், பி.பெ.அக்ரஹாரம், வீரப்பன் சத்திரம், ஆர்.என்.புதூர்  உள்பட பல பகுதிகளில் நேற்று மாலை கன மழை கொட்டியது. சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேல் பெய்த இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

பவானி லட்சுமி நகரில் பகுதியில் குளம் தண்ணீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான பவானியில் கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. பவானி லட்சுமி நகர் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி கடைகளில் தண்ணீர் புகுந்தது. மேலும், கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வரை தண்ணீர் தேங்கி நின்றது. இதையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:- 

ஈரோடு - 108.00 மி.மீ ,

பெருந்துறை - 13.00 மி.மீ , 

கோபி - 10.00 மி.மீ , 

தாளவாடி - 11.20மி.மீ , 

சத்தி - 6.00 மி.மீ ,

பவானிசாகர் - 34.20 மி.மீ , 

பவானி - 64.00 மி.மீ , 

கொடுமுடி - 8.20 மி.மீ , 

நம்பியூர் - 7.00 மி.மீ , 

சென்னிமலை - 7.00 மி.மீ , 

மொடக்குறிச்சி - 31.00 மி.மீ , 

கவுந்தப்பாடி - 26.4 மி.மீ,

எலந்தகுட்டைமேடு - 17.8 மி.மீ , 

அம்மாபேட்டை - 11.0 மி.மீ,

கொடிவேரி - 7.00 மி.மீ , 

குண்டேரிப்பள்ளம் - 14.00 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் - 20.4 மி.மீ , 

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 396.00 மி.மீ ,

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 23.3 மி.மீ.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News