சத்தியமங்கலம் அருகே காவலரின் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை பிரிவில் காவலரின் காலில் இரண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

Update: 2021-11-27 02:30 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை பிரிவில் காவலரின் காலில் இரண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 34) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் சிறப்பு இலக்கு அதிரடிப்படை பிரிவு காவலர். நேற்று முன்தினம் அதிரடிப்படை வளாகத்தில்‌ சக காவலர்களுடன் துப்பாக்கிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்ததில் இரண்டு குண்டுகள் சுவரில் பட்டு சந்தோஷின் வலது, இடது காலில் பாய்ந்தது.அதிரடிப் படை போலீசார் சந்தோஷை உடனடியாக மீட்டு சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குண்டுகளை அகற்றினார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News