பிரம்மதேசம் பொங்காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

பிரம்மதேசம் பொங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.;

Update: 2022-04-20 06:00 GMT

பொங்காளியம்மன் கோவிலில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஏராளமான பக்தர்கள்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் உள்ள பொங்காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் குண்டம் திருவிழா  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் பொங்காளியம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான இன்று குண்டம் திருவிழா நடைபெற்றது.

அதற்கு முன்னதாக அம்மன் அழைத்து வரப்பட்டு கோவில் பூசாரி முதலாவதாக குண்டம் இறங்கினார். இதன் பின்னர்  15 நாட்கள் விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட  ஆண், பெண் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பொங்காளியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

Tags:    

Similar News