அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.78 ஆயிரத்துக்கு நிலக்கடலை ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.78 ஆயிரத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.;

Update: 2022-02-02 12:45 GMT
அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.78 ஆயிரத்துக்கு நிலக்கடலை ஏலம்

பைல் படம்

  • whatsapp icon

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று நடைபெற்ற ஏலத்தில், செம்புளிச்சாம்பாளையம், பச்சாம்பாளையம், பள்ளிபாளையம், பருவாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள், 36 மூட்டைகள் நிலக்கடலையை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

இதில், ஒரு கிலோ நிலக்கடலை குறைந்த பட்சமாக 68 ரூபாய் 10 பைசாவிற்கும், அதிகபட்சமாக 71 ரூபாய் 10 பைசாவிற்கும் ஏலம் போனது. இன்றைய வர்த்தகத்தில், 1.11 குவிண்டால் நிலக்கடலை கொண்டு வரப்பட்ட நிலையில், மொத்தம் 78 ஆயிரத்து 466 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News